வியாழன், 16 ஏப்ரல், 2015

நியூயார்க் நீதிமன்றத்தில் நீதிபதியாக தமிழ் பெண் Raja Rajeshwari

சென்னையில் பிறந்து தனது 16வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவரான ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி, ரிச்மாண்ட் கவுண்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரை நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ரிச்மாண்ட் கவுண்டி மேயரான பில் டி பிளாசியோ பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக ராஜேஸ்வரி பொறுப்பேற்றார். நீதிபதியாக தான் பொறுப்பேற்றது குறித்து அவர் கூறுகையில், இது கனவு போல தோன்றுகிறது. நான் நினைத்ததை விட, மிக அதிகமான பதவி கிடைத்துள்ளது என்றார்.


இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த எனக்கு, இப்பதவியை தந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ள ராஜேஸ்வரி கடந்த 16 வருடங்களாக ரிச்மாண்ட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் பங்கேற்றுள்ள ராஜேஸ்வரி பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களை அரங்கேற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக