செவ்வாய், 21 ஏப்ரல், 2015

பூணூல் அறுப்பு: தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

மயிலாப்பூர் கோவிலில் பிரார்த்தனை முடித்துக் கொண்டு மாதவப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 80 வயது நிரம்பிய விஸ்வநாத குருக்களைத் தாக்கி துன்புறுத்தி அவரது பூணூலையும்  திராவிடர் விடுதலை கழகத்தினர் அறுத்தெறிந்துள்ளனர். இந்தச் செயல் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரவர் கொள்கைகளை ஓங்கிப்பிடித்து கருத்துகளை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்காக ஏதுமறியாத அப்பாவி பெரியவரை அவரது வீட்டுக்கு அருகிலேயே, நடுத்தெருவில் தாக்கியது மிகக் கொடூரமான செயல் என்பதோடு, அனைத்து தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளும் அவரவரின் விருப்பு, வெறுப்புகளைப் பொருத்தது. இதில் மற்றவர் தலையீடு என்பது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பாகும். வன்முறையில் ஈடுபட்டுள்ள திராவிட விடுதலைக் கழகத்தின் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. எனினும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இம்மாதிரியான அராஜகங்கள் தொடராத வண்ணம் சட்டம் ஒழுங்கினைப் பேண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக