சனி, 18 ஏப்ரல், 2015

பி.சதாசிவத்தை மனித உரிமை கமிஷன் தலைவராக பரிந்துரைக்க எதிர்ப்பு!

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவத்தை தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யக்கூடாது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம், அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் கேரள மாநில கவர்னராக அவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தற்போது மனித உரிமை கமிஷன் தலைவராக உள்ள நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மே மாதம் 12ஆம் தேதி அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதைத்தொடர்ந்து மனித உரிமை கமிஷன் தலைவராக முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் பெயரை தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக