ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

ஓ காதல் கண்மணி லிவிங் டு கெதர் கதையாமே? வீட்டுக்கு ரொம்ப விசேஷங்க?

கலாச்சாரத்தை திசை திருப்புமா ‘ஓ காதல் கண்மணி’?
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் , நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ காதல் கண்மணி’ . படத்திற்கு இசை ‘ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் அனைத்து பாடல்களுக்கும் வரிகள் வைரமுத்து. ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.
படத்தை பார்த்த சென்சார் தரப்பு படத்திற்கு யு/ஏ கொடுத்துள்ளது. பாடல்கள் அனைத்தும் இணையத்தில் ஹிட்டடித்து வரும் நிலையில். இன்று படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து முடிந்துள்ளது.
அதில் வைரமுத்து பேசுகையில் , கண்டிப்பாக இப்படம் ஒரு கலாச்சார அதிர்வை ஏற்படுத்தும் என கூறினார். மேலும் ‘மெண்டல் மனதில் ‘ பாடல்  ஏ.ஆர்.ரஹ்மானும், மணிரத்னமும் இணைந்து எழுதியுள்ளார்கள். அந்த வேளையில் நான் ஊருக்கு சென்று விட்டேன்.

 நான் ஊருக்கு சென்ற வேளையில் இரு கவிஞர்கள் உருவாகியுள்ளனர். இனி நான் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து என்ற எங்கள் கூட்டணி இணைந்து 23வருடங்கள் ஆகின்றன அதில் ‘ஓ காதல் கண்மணி’ம் படம் எங்களுக்கு 23வது படம் எனவும் படம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் ஆனால் அவை தரம் வாய்ந்த படங்களாகவே மணிரத்னம் கொடுத்துள்ளார் என கூறினார்.
’அலைபாயுதே’ வந்த வேளையில் இளைஞர்கள் பலரும் அப்படம் பாணியில் வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்ந்தனர். இப்போது வரை அது நடந்து வருகிறது. இப்படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் ‘லிவ்விங் டூ கெதர்’ பாணியில் இருப்பதாக சொல்லப்படுகிரது இதை பார்த்தும் இளைஞர்கள் அதை பின்பற்றுவார்களே என கேள்விகள் எழுப்பட்டன.
அதற்கு மணிரத்னம் இதற்கு இவர் பதில் சொல்வார் என பி.சி.ஸ்ரீராமிடம் மைக்கை கொடுக்க நிச்சயம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது என கூறிவிட்டார். vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக