திங்கள், 13 ஏப்ரல், 2015

நேதாஜியை உளவு பார்த்த நேரு! அவரின் உறவினர்களையும் 1948லிருந்து 1968 வரை இந்திய விசாரணை அமைப்புகள் உளவு பார்த்தன,


புதுடில்லி : சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் குடும்பத்தினர் பற்றிய தகவல், இந்திய உளவு அமைப்பால், பிரிட்டனுக்கு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் உறவினர்கள், 1948லிருந்து, 1968 வரை, இந்திய விசாரணை அமைப்புகளால் உளவு பார்க்கப்பட்டதாக, சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது. முன்னாள் பிரதமர் நேரு, இதற்கு உத்தரவிட்டதாகவும், அவர் இறந்ததற்கு பின்னும், நேதாஜியின் குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஜெர்மனிக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அங்கு வசிக்கும், நேதாஜியின் சகோதரர் பேரன் சூர்ய குமார் போஸ், நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது அவர், நேதாஜி யின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் தொடர்பான தக வல்களை வெளியிடும்படி வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கிடையே, பிரிட்டனில் இருந்து வெளியாகும், 'மெயில்' பத்திரிகையில், கடந்த 1947ல், நேதாஜியின் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை, பிரிட்டன் புலனாய்வு அமைப்புக்கு, இந்திய உளவு அமைப்பான ஐ.பி., அளித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும், நேதாஜியின் உதவியாளர், நேதாஜியின் உறவினர் அமியா நாத்துக்கு எழுதிய கடிதத்தை, புலனாய்வு அமைப்பு இடைமறித்து ஆய்வு செய்ததாகவும், அதில் கூறப்பட்டு உள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக