திங்கள், 6 ஏப்ரல், 2015

தீர்ப்பு வரும்வரை வழிபாடுகளை தொடருங்கள்! அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் ரகசிய உத்தரவு

கோர்ட் தீர்ப்பு வரும் வரை, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை தொடர வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, கட்சி மேலிடம் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த செப்டம்பரில், கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. உடன், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆத்திரமடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், மறியல், உண்ணாவிரதம் என, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே, போராட்டங்களை கைவிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும்படி, தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டது. அதை ஏற்று, கட்சியினர் கோவில்களை நோக்கி படையெடுத்தனர். தேவாலயம், மசூதி என, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நெறைய பேர் வழிபாடு செய்யுராங்கோ ஆனா எதுக்குன்னுதான் சந்தேகம்? அவிங்க சுதந்திரமா வந்தா அடாவடி அலப்பறை தாங்க முடியாது . தினம் தினம் குனிந்து குனிந்து  ரிவேர்ஸ்லயே நடந்து அதுவும் குனிந்து கொண்டே ரிவேர்ஸ்ல நடக்கிறதுன்னு இன்னும் என்னன்னவோ? சாமியோவ்  என்னென்னைக்கும் அவிங்க ... அடிமைகளின் உண்மையான வேண்டுதல் மாரியாத்தா கேக்காம போயிடிவாளா ?


இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்க, சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, போயஸ் கார்டனில் தங்கியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். இதில் விவாதம் முடிந்து, தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் நிலை உள்ளது.தீர்ப்பு எப்போது வரும் என்பது தெரியாததால், கட்சியினர் அனைவரும், திக், திக், திக் மனதுடன் உள்ளனர்.தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக, வழிபாட்டுத் தலங்களில், வழிபாடுகளை நடத்தும்படி ஏற்கனவே, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருந்தது. தற்போது, தீர்ப்பு வரும் வரை, வழிபாடுகளை தொடரும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதனால், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் பகுதிகளில், யாகம் நடத்துவது, பால் குடம் எடுப்பது, மண் சோறு சாப்பிடுவது, கோ பூஜை நடத்துவது, இலவச திருமணம், கோ தானம் என, பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.யாகங்களை பிரம்மாண்டமாக நடத்துவதில், அமைச்சர்கள் இடையே கடும் போட்டியும் நிலவுகிறது. ஒவ்வொருவரும் பிரம்மாண்டமாக யாகம் நடத்தி, அதன் புகைப்படங்களை, கட்சி தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக