செவ்வாய், 14 ஏப்ரல், 2015

தாலி அகற்றும் போராட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி

திராவிடர் கழகம் சார்பில் நாளை தாலி அகற்றும் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த போராட்டத்திற்கு தடைபோடவேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன்படியே, இந்த போராட்டத்திற்கு தடை விதித்தது ஐகோர்ட். இதையடுத்து திராவிட கழக துணைதலைவர் கலி.பூங்கன்றன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஹரிபந்தாமன், தாலி அகற்றும் போராட்டத்திற்கும், மாட்டுக்கறி விருந்திற்கும் அனுமதி அளித்தார். மேலும், இந்த போராட்டத்திற்கு தேவையான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக