வியாழன், 30 ஏப்ரல், 2015

பஞ்சாப்: ஓடும் பஸ்ஸில் தாயையும் மகளையும் ஒரே நேரத்தில் பாலியல் பலாத்காரம்! மகள் பலி! முதலைமைச்சருக்கு சொந்தமான பஸ்!

அமிர்தரசஸ் - பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் தன் 14 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் குருத்வாரா கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அவர்கள் ஏறிய தனியார் பஸ்சில் பயணிகள் மிக மிக குறைவாகவே இருந்தனர். சுமார் 10 கி.மீ தூரம் கடந்திருந்த நிலையில் பஸ்சில் இருந்த கண்டக்டரின் உதவியாளர் எழுந்து வந்து தாயாருடன் இருந்த இளம்பெண்ணிடம் தகாத செயல்களில் ஈடுபட்டார்.
இதை அந்த பெண்ணின் தாய் தட்டிக் கேட்டார். உடனே அந்த நபர் அந்த பெண்ணை அடித்து உதைத்தார். பஸ்சில் இருந்த யாரும் அதை தடுக்கவில்லை. அதற்கு பதில் அந்த பெண்ணிடமும் அவரது மகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். 6 பேரிடம் சிக்கி கொண்ட தாயும், மகளும் தப்பிக்க வழியில்லாமல் படாதபாடு பட்டனர்.
ஒரு கட்டத்தில் தாயும், மகளும் டிரைவரிடம் ஓடி சென்று பஸ்சை நிறுத்துங்கள் என்று கதறினார்கள். ஆனால் பாலியல் அட்டகாசத்தில் ஈடுபட்ட கும்பல் டிரைவருக்கு நண்பர்கள் என்பதால் டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை.
ஓடும் பஸ்சில் நீண்ட நேரம் இந்த பாலியல் அத்துமீறல் நடந்தது. ஒரு திருப்பத்தில் பஸ் திரும்பிய போது திடீரென அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இளம்பெண்ணை பிடித்து வெளியில் தள்ளினார்கள். பிறகு ஓடும் பஸ்சில் இருந்து தாயையும் தள்ளி விட்டனர். சாலையோரத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்த தாயும், மகளும் உதவி கோரி கதறினார்கள்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். சில மணி நேரங்கள் வரை தாயும், மகளும் ரோட்டோரத்தில் தவித்தபடி கிடந்தனர். உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறி விட்டதால் சம்பவ இடத்திலேயே இளம்பெண் உயிரிழந்தார். அவரது தாய் மயங்கி கிடந்தார். மோகா நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  3 மணி நேரம் கழித்த பிறகே மயக்கம் தெளிந்து எழுந்தார். அதன் பிறகே தாயுக்கும், மகளுக்கும் ஏற்பட்ட கொடூரம் மற்றவர்களுக்கு தெரியவந்தது.போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
பாலியல் அத்துமீறல் நடந்த பஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பஸ் பஞ்சாப் முதல்வர் சுக்பீர் பாதலுக்கு சொந்தமானது என்றும் அதை அவர் லீசுக்கு விட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. பஸ்சில் பயணம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கண்டக்டரின் உதவியாளர் ஆவார். பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் தேடி வருகின்றனர். டிரைவர், கண்டக்டர் இருவர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மோகா மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பஸ்சில் சென்ற தாயும், மகளும் பாலியல் துன்புறுத்தல் காரணமாக ஓடும் பஸ்சில் இருந்து வெளியில் குதித்ததாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
இதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் ஆவேசமடைந்த அவர்களது கிராமத்தை சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டன  thinaboomi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக