திங்கள், 23 மார்ச், 2015

முகேஷ் அம்பானி சன் டிவி குழுமத்தை வாங்க முயற்சி? ETV . IBN CNN , SunTV ஊடக சர்வாதிகாரத்தை நோக்கி?

சென்னை/மும்பை: தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான கலாநிதி மாறன் சன் குழுமத்தையே ஒட்டு மொத்தமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்க உள்ளதாக தெஹல்கா செய்தி வெளியிட்டுள்ளது. ஏர்செல் -மேக்சிஸ் வழக்கில் சன் டி.வி. குழும அதிபர் கலாநிதி மாறன் அவரது சகோதரர் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவரும் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் மாதம் விசாரணை நடைபெற உள்ளது. அம்பானியின் தொடரும் வேட்டை: ஈடிவி, சிஎன்என்-ஐபிஎன்-ஐ தொடர்ந்து சன் டிவியையும் வாங்க திட்டம்?! இதேபோல் தயாநிதி மாறன் மீது சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதிலும் கலாநிதி மாறனும் சன் குழுமமும் சிக்கியுள்ளது. இந்நிலையில் அண்மையின் சன் குழுமத்துக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கை மாற்றப்பட்டது. இந் நிலையில் சன் நெட்வொர்க் குழுமத்தையே கைமாற்றிவிடவும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களான ஈ டிவி, சி.என்.என்.-ஐ.பி.என் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்நிலையில் தெஹல்கா இணையதளத்தில் சன் டிவி குழுமத்தையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தான் வாங்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. டெஹல்கா செய்தியில், சன் டி.வி. குழுமத்தை வாங்குவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன அதிகாரிகள் சென்னை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ டி.வி.யைத் தொடர்ந்து சன்.டி.வி.யையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கைப்பற்றும் போது 2 மிகப் பெரிய பிராந்திய தொலைக்காட்சி குழுமங்களை தன்வசம் கொண்டதாக விஸ்வரூபமெடுத்துவிடும். இதன் மூலமாகக ஊடகத் துறையில் தீர்மானிக்கும் சக்தியாக, மக்களிடத்தில் கருத்துகளை திணிக்கிற சக்தியாக ரிலையன்ஸ் குழுமம் உருவெடுக்கும் என்கிறது தெஹல்கா. ஆனால், இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை
p://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக