திங்கள், 23 மார்ச், 2015

சிங்கப்பூரின் நிறுவனர் லீ குவான் யூ மரணம்...


சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூ (91) இன்று காலமானார், இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது. உயிரிழந்த லீ குவான் யூ சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படுகிறார். இவர் 31 ஆண்டுகள் பிரதமராக இருந்து சிங்கப்பூரின் மாபெரும் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவையடுத்து சிங்ப்பூரில் ஒரு வாரம் துக்க தினமாக அனுசரிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. லீ குவான் மறைவிற்கு ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ-மூன், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லீ குவானை மாபெரும் வரலாற்று தலைவர் என கூறியுள்ளார்.dinakara.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக