வியாழன், 19 மார்ச், 2015

சீனாவில் முதல் சர்வதேச யோகா தின விழா: இந்தியா பங்கேற்பு


சீனாவில் முதல் சர்வதேச யோகா தின விழா: இந்தியா பங்கேற்பு
பீஜிங்: சீனாவில் வரும் ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையி்ல் யோகா தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் இந்தியா பங்கேற்க உள்ளத கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி ஐநா சபையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்தியாவில் உள்ள யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி அதனை சர்வதேச அளவில் பிரபலப்படு்த்தும் வகையில் சர்வதேச தினமாக அறிவிக்க வலியுறுத்தினார். மோடியின் கருத்துக்கு சீனா உள்ளிட்ட ஐ.நா.,வின் 170 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து ஐ.நா.,சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என டிசம்பர் 2014-ல் முறைப்படி அறிவித்தது.

இந்நிலையி்ல்இந்தாண்டு 2015-ல் முதல் சர்வதேச யோகா தினம் சீனாவி்ன் சி்ச்சுவான் மாகாணத்தை சேர்ந்த செங்குடுவில் வரும் ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதிவரையில் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக இந்திய துணை தூதர் நாகராஜூ நாயுடு தெரிவித்துள்ளார்.
சீனாவி்ல் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின விழாவில் இந்தியாவி்ல் உள்ள பல்வேறு யோகா மையங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாவை உலகம் முழுவதும் நேரிடையாக ஒளிபரப்பு செய்வதற்காக 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் தயாராக உள்ளதாக நாயுடு தெரிவித்துள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக