வியாழன், 19 மார்ச், 2015

உடன்குடி மின் திட்டம் ரத்து செய்தது ஏன்? தனியார் மின்சாரம் கமிசனோடு கிடைக்குமே?

சென்னை: 'உடன்குடி மின் நிலைய கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை, தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டெண்டரை, ரத்து செய்தது குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான, பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.,) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து, 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு யூனிட்டுகள் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இந்த திட்டத்தை, முழுவதுமாக, 2012ம் ஆண்டு ரத்து செய்து விட்டு, 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிப்., 24, 2012ல் அறிவித்தார். தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து, மின்சாரம் வாங்குவதில் காட்டப்படும் உற்சாகம்?    தி மு க ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டு சாராயம் மட்டும் விற்று மக்களை ஏமாத்தி கொண்டிருக்கிறார்கள், மூன்று வருடங்கள் ஆகியும் புதிதாக ஒரு MV திட்டத்திற்கு கூட வழிவகுக்கவில்லை மக்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை  கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதற்காக டெண்டர் விடும் பணிகள், 2013ம் ஆண்டு ஏப்ரலில் துவங்கப்பட்டன. இதில், மத்திய அரசு பொது நிறுவனமான பி.எச்.இ.எல்., மற்றும் சீனாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் உட்பட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. 2013ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்ப புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டதில், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனமும், 'பெல்' (பி.எச்.ஈ.எல்.,) நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால், நீண்ட இழுபறிக்கு பின், 2014ம் ஆண்டு நவம்பரில் தான், விலைப் புள்ளி திறக்கப்பட்டது. இதில், பி.எச்.இ.எல்., மற்றும் சீனா நிறுவன டெண்டர்கள் மட்டும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த டெண்டரை யாருக்கு முடிவு செய்வது என்பதில் குழப்பம், கடந்த ஓராண்டு காலமாக நீடிப்பதாக சொல்லி வந்தனர். மின் வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த நிறுவனத்திற்கு, பணி ஆணை வழங்க, தமிழக அரசுக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டது.
உடன்குடி டெண்டர் பற்றிய கோப்புகளை தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள், மின் வாரிய அதிகாரிகளிடமிருந்து பெற்று, எரிசக்தி துறைச் செயலர் அலுவலகத்தில் பரிசீலித்திருக்கின்றனர். மின் வாரிய அலுவலகத்தில், கடந்த மார்ச் 13ம் தேதி அன்று மாலையில் நடைபெறுவதாக இருந்த இயக்குனர் குழுக் கூட்டமும், தலைமைச் செயலகத்திற்கு மாற்றப்பட்டு, அங்கே கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அந்த கூட்டத்தில், உடன்குடி மின் நிலைய கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை, தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டெண்டரை, ரத்து செய்து விட்டு, புதிதாக டெண்டர் வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது. தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து, மின்சாரம் வாங்குவதில் காட்டப்படும் உற்சாகம் தான் தாமதத்திற்கும், இறுதியில் டெண்டர் ரத்து செய்ததற்கும் காரணமா? தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தை முறைப்படி நிறைவேற்றியிருந்தால், தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. இந்த ஒரு டெண்டரில் மட்டும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விருப்பு, வெறுப்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக