புதன், 4 மார்ச், 2015

பார்த்திபனின் வழக்கமான வல்கர் பேச்சுக்கு சைலன்ட் டோஸ் கொடுத்த ஆண்ட்ரியா

கமல்ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்‘ பட டிரைலர், ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. ஹீரோயின்கள் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பார்த்திபன் 3 ஹீரோயின்களையும் மேடைக்கு அழைத்தார். பூஜாவுக்கு சரிவர தமிழ் தெரியாது என்பதால் தான் தமிழில் கேட்கும் கேள்விகளை அவருக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லும்படி அருகிலிருந்த ஆண்ட்ரியாவிடம் கேட்டுக்கொண்டார் பார்த்திபன். ‘கமலுடன் நடித்த அனுபவம், உங்கள் அழகின் ரகசியம் என்ன? கமல் முத்தமிட்டு கன்னம் வீங்கிவிட்டதா?'  என சரமாரியாக கேள்விகளை கேட்டார் பார்த்திபன். ஆனால் ஆண்ட்ரியா எந்த கேள்வியையும் மொழிமாற்றம் செய்துசொல்லாமல் மவுனம் காத்தார். கேள்வி புரியாமல் பூஜா குமார் தவிப்பதை பார்த்து அருகில் இருந்த பார்வதி, கேள்விகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆனாலும் பூஜா குமார் சரிவர கேள்வியை புரிந்துகொள்ள முடியாமல் திணறியபடி நின்றார். அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கமல், முத்தம் பற்றி பார்த்திபன் கேள்வி கேட்டதும் சுதாரித்துக்கொண்டார். அருகிலிருந்தவரிடம் மைக்கை வாங்கி ‘இந்த வம்புக்கு நான் வரவில்லை'  என்று கூறி பார்த்திபனின் சில்மிஷ கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது. - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக