புதன், 4 மார்ச், 2015

இளையராஜா முழுக்க முழுக்க வியாபாரியானார்! தனது பாடல்களை தயாரிப்பாளர் சங்கத்திடம் கமிசனுக்கு...


இளையராஜா : இனிமேல் என்னுடைய இசையை அதிகாரப்பூர்வமாக உலகளவில் எந்தவொரு மொபைல் நிறுவனமும், உலகளாவிய இணையதளங்களிலும், யூடியூப், டெய்லி மோஷன் போன்ற இன்னும் பல வீடியோ இணையதளங்களிலும், ஆடியோ, வீடியோ விளம்பரங்களிலும், ரீமிக்ஸ் செய்யவோ, எப்.எம்., டிவியில் ஒலி / ஒளிபரப்பவோ, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் முறையற்ற வகையில் இசையை உபயோகிக்கவோ தயாரிப்பாளர் சங்கத்தில் முறையான அனுமதி பெற வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
தென்னிந்திய திரைப்பட உலகில் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. கடந்த 1970-ஆண்டு முதல் இதுநாள் வரை இசையமைத்து வருகிறார். 1000 படங்களுக்கு மேலும், 4500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் மெட்டமைத்துள்ளார். இசைக்காக 5 விருதுகளும் பெற்றுள்ளார்.இந்நிலையில், இவருடைய இசையி அமைந்துள்ள பாடல்களை இவருடைய அனுமதியின்றி சில நிறுவனங்கள் விற்பனை செய்து வருவதாக கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி, இவரது பாடல்களை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. அது  சரி  பாரம்பரிய சங்கீத மேதைகளிடம் இருந்து  பொறுக்கியதை  கோடிக்கணக்கில் காசுக்கு வித்தது பத்தாதுன்னு  நிரந்தரமா கொள்ளை அடிக்க துணிந்த ராசா ? இதுக்குள்ள சாமியார் வேஷம் வேற!


இந்நிலையில், இளையராஜா தனது பாடல்களின் உரிமையை தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்கியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கலைப்புலி தாணுவிடம் இவருடைய 1000 படங்களின் பாடல்கள் உரிமைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த இளையராஜா கூறும்போது, இனிமேல் என்னுடைய இசையை அதிகாரப்பூர்வமாக உலகளவில் எந்தவொரு மொபைல் நிறுவனமும், உலகளாவிய இணையதளங்களிலும், யூடியூப், டெய்லி மோஷன் போன்ற இன்னும் பல வீடியோ இணையதளங்களிலும், ஆடியோ, வீடியோ விளம்பரங்களிலும், ரீமிக்ஸ் செய்யவோ, எப்.எம்., டிவியில் ஒலி / ஒளிபரப்பவோ, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் முறையற்ற வகையில் இசையை உபயோகிக்கவோ தயாரிப்பாளர் சங்கத்தில் முறையான அனுமதி பெற வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக