வியாழன், 26 மார்ச், 2015

தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகிறார் சதாசிவம்?

புதுடில்லி: கேரள மாநில கவர்னர் சதாசிவம்தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் பதவி வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது முன்னதாக (என்.எச்.ஆர்.சி) இப்பதவியில் இருந்து வரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வரும் ஜூன் மாதம் ஒய்வு பெற உள்ளார். இதனையடுத்து அப்பதவிக்கு போட்டியிட சதாசிவம் விருப்பம் தெரிவி்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1993-ம் ஆண்டு முதல் என்.எச்.ஆர்.சி பதவிக்கு ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே .தலைவர்களாக நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். ரங்கநாத்மிஸ்ரா (1993-96),எம்.வெங்கடசாலையா (1996-99),எஸ். வர்மா (1999-2003),ஏ.எஸ்., ஆனந்த் (2003-2006) ராஜேந்திரபாபு (2007-2009) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.ஆஹா சதாசிவம் நிச்சயமாக மனித உரிமை கமிசனுக்கு மட்டுமல்ல ஜனாதிபதி பதவிக்கு கூட  ரொம்ப  லாயக்கானவர்தான். அவரது ட்ராக் ரிகார்ட் அப்படி. அமித்ஷா ஜெயலலிதா போன்றவர்கள்  சட்டத்தின் பிடியில்  இருந்து தப்பிக்க இந்தமாதிரி எல்லாம் தேவைதான் .


மேலும் கேரள மாநில கவர்னராக இருந்து வந்த ஷீலா தீட்ஷித்திற்கு பதிலாக சதாசிவம் கேரள மாநில கவர்னராகநியமனம் செய்யப்பட்டார். இந்திய அளவில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் மாநில கவர்னராக நியமிக்கப்படுவது சதாசிவம் மட்டுமே என்ற பெருமையை பெற்றார். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள சட்டசபையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.,க்களின் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் சதாசிவத்தின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தகுந்தாற்போல் என்.எச்.ஆர்.சி அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான கே.ஜி.,பால கிருஷ்ணனின்பதவி காலமும் முடிவடைய உள்ளதால் அப்பதவிக்கு மாற சதாசிவம் விருப்பம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக