ஞாயிறு, 8 மார்ச், 2015

நிர்பயா ஆவணப்பட விவகாரம்: கண்மூடித்தனமாக அனுமதி அளித்த காங்., அரசு: நஜ்மா குற்றச்சாட்டு

புதுடில்லி:நிர்பயா பாலியல் குற்றவாளிகள் குறித்த ஆவணப்படத்தை எடுக்க பி.பி.சி., ஊடகக் குழுவுக்கு, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு கண்மூடித்தனமாக அனுமதி அளித்தது என்று, மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து டில்லியில் பத்திரிகையாளர்களிடம் நேற்று அவர் கூறுகையில்,நிர்பயா பாலியல் குற்றவாளிகள் குறித்த ஆவணப்படத்தை எடுக்க பிபிசி ஊடகக் குழுவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதி அளித்தபோது, கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகளையும், அந்த ஆவணப்படத்தின் எழுத்துப் பிரதியையும் சரிபார்க்காமல் கண்மூடித்தனமாக அனுமதி அளிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் தற்போது, உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்துள்ள நடவடிக்கைகள் உறுதியானவை. இதில், மத்திய அரசு இனி எடுக்கவுள்ள நடவடிக்கைகளும் சரியாகத்தான் இருக்கும்.  இந்தியாவில் நடந்த ஒரு சம்பவத்தை ஆவணப்படம் எடுத்து உலகிற்கு  வெளிச்சம் போட்டு காட்டியதை  தவறு என்று இந்த நஜ்மாவும் இவரது பிஜேபி யும் கூக்குரல் இடுகிறது. வடகொரியா சவுதி அரேபியா எல்லாம் இவிங்க கிட்ட  ட்ரெயினிங் எடுத்துக்கணும்? மூடி மறைக்க அப்படி ஒரு  வேகம் ஆசை அவசரம்! ஹிந்துராஷ்டம் இஸ்லாமிய ராஷ்ட்ரம் எல்லாம் ஒன்னுதாய்ன் 

இதுபோன்ற படங்களை எடுக்க, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள், இந்தியச் சூழலையோ, இங்குள்ள பிரச்னைகளையோ அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.தங்கள் படங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களும், பிறரை தரக்குறைவாக சித்தரிக்கும் அம்சங்களும் இடம்பெறுவது பற்றியும் அவர்கள் கவலை கொள்வதில்லை.
மேலும், ஒரு படத்தைத் தயாரிக்கும்போது அது, பிறரின் உணர்வுகளைக் காயப்படுத்தும்படி இருக்கக்கூடாது என்ற நெறிமுறையையும் அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், நம்மைப் பொருத்தவரை இந்த விவகாரம் நாட்டின் கவுரவம், உணர்வு ஆகியவை தொடர்புள்ளதாகும் என்றார் நஜ்மா ஹெப்துல்லா. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக