சனி, 7 மார்ச், 2015

BBC மீது நடவடிக்கை ! மத்திய அரசு ஆலோசனை ! பிஜேபி காரங்க ஏதோ தாங்களேதான் பேருந்துல கற்பழிச்சவிங்க மாதிரி bbc நினைச்சு நடுங்குராய்ங்க?

Rajnath-interview(C)
புது டெல்லி - ஆவணப்படம் வெளியிட்டது தொடர்பாக பிபிசி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளியான முகேஷிடம் ஆவணப்படத்திற்காக பிபிசி நிறுவனம் பேட்டி எடுத்தது.
இந்தியாவின் மகள் என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் சர்வதேச மகளிர் தினத்தன்று ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தில் முகேஷ் சிங் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. எனினும், தடையை மீறி இந்த ஆவணப்படம் திடீரென ஒளிபரப்பப்பட்டது.இதுகுறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  கூறும் போது, பிபிசி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் பற்றி அரசு ஆராய்ந்து வருகிறது என்றார்.thinaboomi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக