வெள்ளி, 13 மார்ச், 2015

பூஜா குமார் : வயதானால் நடிக்கக்கூடாதா?

பூஜாகுமார். ' விஸ்வரூபம் 2'  படத்தில் நடிப்பதுடன் உத்தமவில்லன் படத்திலும் கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார். 36 வயதாகும் பூஜா கூறியது:நடிப்புக்கு வயது ஒரு பொருட்டல்ல என்று எண்ணுகிறேன். வயதானால் நடிக்கக் கூடாதா? ஸ்ரீதேவி, ஹேமமாலினி இருவரும் இன்னமும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வயதைப்பற்றி நான் கவலைப்படுவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் போக வேண்டும். ஒவ்வொரு நடிகருக்கும் என்ன வேண்டுமென்றால், சினிமாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான். பல வருடங்களுக்கு முன் நடித்ததற்கும், விஸ்வரூபம் படத்தில் நடித்ததற்கும் நான் நிறையவே மாறி இருந்தேன். பெரிய மாற்றத்துக்கு நான் உட்பட்டிருக்கிறேன். நடிப்பில் குறிப்பிடத்தக்க விஷயம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதுதான் நல்லது. நேற்றைக்கு என்ன செய்தோமோ, அது மறுநாளைக்கு எடுபடாமல் போகலாம். மாறுபட்ட வேடங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் அனுபவம் நம்மை பக்குவப்படுத்தும். இவ்வாறு பூஜாகுமார் கூறினார். - See more at: .tamilmurasu.org/I

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக