வியாழன், 5 மார்ச், 2015

தமிழக காங்கிரசிற்கு தலைவர் மாற்றம்? குஷ்புவுக்கு ஜாக்பாட்?

டில்லியில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை அழைத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா அவசர ஆலோசனை நடத்தியதை அடுத்து, தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கி விட்டு, புதிய தலைவரை நியமிப்பது குறித்து, சோனியா ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரம் - இளங்கோவன் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், தமிழக காங்கிரஸ் கட்சி இரண்டுபட்டு நிற்கிறது. இளங்கோவன் பேச்சுக்களால், கடும் அதிருப்தி அடைந்த சிதம்பரம், இரண்டு நாட்களுக்கு முன், டில்லியில் சோனியாவை சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது, நடந்த விவாதம் குறித்து, காங்கிரசில் உள்ள நம்பத் தகுந்த வட்டாரம் கூறியதாவது: இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவராக நீடிக்கும் வரையில், கட்சியில் ஒற்றுமை ஏற்படுவதற்கு வழியில்லை என்றும், தன்னால் தொடர்ந்து செயல்பட முடியாது என்றும், சோனியாவிடம் சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கவர்ச்சியை மட்டுமே விரும்பி காவடி எடுத்து  அலகு குத்தி கண்ணீர்விட்டு அரசியல் பண்ணும் தமிழ்நாட்டுக்கு குஷ்புதாய்ன் அடுத்த மக்களின் ? 
இளங்கோவனின் பேச்சு, பேட்டி போன்றவற்றை சுட்டிக்காட்டி, சிதம்பரம் கூறிய கருத்தை சோனியாவும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இளங்கோவனை எடுத்தால், அடுத்து யாரை நியமிக்கலாம் என்ற பேச்சு வந்துள்ளது. சிதம்பரம் தன் தரப்பில், முன்னாள் எம்.பி., அழகிரியின் பெயரை பரிந்துரைத்துள்ளார். அதை சோனியா ஏற்க மறுத்து விட்டார். எல்லா தரப்புக்கும் பொதுவானவராக சொல்லுங்கள் என கூறி விட்டார். சுதர்சன நாச்சியப்பன், செல்லக்குமார் என நடந்த, நீண்ட விவாதத்திற்கு பின், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார் பெயர்களை சோனியா குறிப்பிட்டுள்ளார். இதில், திருநாவுக்கரசரை ஆதரிக்க, சிதம்பரம் மறுத்து விட்டதாக தெரிகிறது. மேலும், அ.தி.மு.க., - பா.ஜ., போல், பெண் ஒருவரை தலைவராக்குவது பற்றியும் பேசப்பட்டுள்ளது. குஷ்பு, விஜயதாரணி எம்.எல்.ஏ., பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதற்கும் சிதம்பரம் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அதையடுத்து, இதில் சோனியாவின் முடிவு என்ன என்பது விரைவில் தெரிந்து விடும். இவ்வாறு, காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக