செவ்வாய், 17 மார்ச், 2015

கோலி படப்பிடிப்பு மலேசியாவில் !தப்பி தவறியும் ஒரு மலேசியா கலைஞருக்கு வாய்ப்பு கொடுக்கவே மாட்டாய்ங்க

நரேஷ், பிரசாத், தமிழ், சந்தோஷ் குமார், புதுமுகம் தீப்தி ஷெட்டி நடிக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி‘. எழுதி இயக்கி தயாரிக்கிறார் மனோகரன். அவர் கூறியது:தமிழ்நாட்டு தெருக்களில் அந்த காலத்தில் கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டுகளை விளையாடி வந்தார்கள். நவீன யுகத்தில் அதெல்லாம் மறைந்துவிட்டது. கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்றவை பிரபலமாகிவிட்டது. ஆனால் பழைய விளையாட்டுக்களில் கைதேர்ந்த 4 பேர் தொழில் நிமித்தமாக மலேசியா செல்கின்றனர்.
அங்கு உருவாகும் ஒரு பிரச்னையை தாங்கள் விளையாடும் கில்லி, பம்பரம், கோலி விளையாட்டை பயன்படுத்தி எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் கதை. கலகலப்பான ஸ்கிரிப்ட்டாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு முழுவதும் மலேசியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கிறது. ஒய்.ஆர்.பிரசாத் இசை. நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு. கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். - See more at: tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக