வெள்ளி, 27 மார்ச், 2015

சௌகார் பேட்டை! வெட்டேத்தி சுந்தரம் என்ற காட்டேரி படம் எடுத்தவரின் புதியபடம்



மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக ராய் லட்சுமி நடிக்கிறார்.  மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜான் பீட்டர் இசையமைக்க படத்துக்கு சீனிவாசரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சி..வடிவுடையான். இவர் 'தம்பிவெட்டோத்தி சுந்தரம்’ என்ற படத்தை இயக்கியதுடன், விரைவில் வெளியாக உள்ள “ கன்னியும் காளையும் செம்ம காதல் ‘படத்தையும் இயக்கி உள்ளார்.

படத்தை பற்றி இயக்குநர் வடிவுடையானிடம் கேட்டோம்… சென்னையில் உள்ள சவுகார்பேட்டை ஜனசந்தடி அதிகமுள்ள இடம் மட்டுமல்ல… பணம் அதிகளவில் புழங்கும் இடமும் கூட.. அப்படிப்பட்ட சவுகார்பேட்டையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கதை!
காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், திகில், ஹாரர் எல்லாமும் இருக்கும் கமர்ஷியல்  படம் இது. ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று முடிவடைகிறது என்றார் வடிவுடையான் maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக