செவ்வாய், 17 மார்ச், 2015

1 லட்சத்துக்குமேல் தங்கம் உட்பட எதுவாங்கினாலும் பான் அட்டை அவசியம்

ரூ. 1 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்க நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை) அவசியமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தங்க நகை வியாபாரிகள் வலியுறுத்தினர். இது குறித்த அனைத்திந்திய நவரத்தினங்கள், தங்க நகை வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் என்.அனந்த பத்மநாபன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ. 1 லட்சத்துக்குமேல் எந்தப் பொருள் வாங்கினாலும் பான் அட்டை அவசியம் என்று தெரிவித்தார். இதனால், தங்கநகை வியாபாரிகள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டால், தங்கநகை விற்பனையில் 50 சதவீதம் வரை பாதிக்கப்படும்.எனவே, ரூ.1 லட்சத்துக்குமேல் பொருள்கள் வாங்குவதற்கு பான் அட்டை அவசியம் என்ற அறிவிப்பில் இருந்து தங்க நகைக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தங்கத்துக்கான சுங்கவரியை 10 சதவீதத்திலிருந்து, 2 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக