வியாழன், 19 பிப்ரவரி, 2015

விகடன் :ஆதரிப்பார் யார்...?- கூட்டணிக்கு வலை வீசும் திமுக! : stalin stalin stalin I love you என்னை விட்டு போகாதே மன்னன் உன்னை எந்தன்

டந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தின் அரசியல் வானத்தில்  சுருங்கிய புள்ளியாக மாறிப்போன திமுகவுக்கு,  ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆளும்கட்சியின் அத்தனை அதகளத்திற்கு பின்னரும் டெபாசிட்டை பறிகொடுக்காமல் கவுரவமான வாக்குகளை பெற்றது,  அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை துணிவுடன் சந்திக்கும் தெம்பை கொடுத்துள்ளது.
தனித்து நின்றே கிடைத்த டெபாசிட் திமுகவிற்கு  `பூஸ்ட்`  அளித்துள்ளது என்பதை அதன் மாநில செயற்குழு கூடும் அறிவிப்பு காட்டுகிறது. வரும் 2016 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத்  தேர்தலைச்  சந்திக்க கண்டிப்பாக வலுவான கூட்டணி அவசியம் என்று  நிலையில் இருக்கும் திமுக தலைமை, அதற்கான முஸ்தீபுகளில் இறங்கி உள்ளது ஆனால் இந்த முறை திமுக தலைமையை ஏற்று, கூட்டணியில் இடம்பிடித்து தேர்தல் வடம் பிடிக்க தமிழக அரசியல் கட்சிகளிடையே அவ்வளவாக ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. கலைஞர் அய்யா மன்னிக்கவேண்டும் : ஸ்டாலின். துர்கா .உதயநிதி. கிருத்திகாவிடம் இருந்து திமுகவுக்கு விடுதலை கிடைக்காது. ஒரு சுயமரியாதை பகுத்தறிவு  நதியின் இறுதி அத்தியாயம் தொடங்கி விட்டதாக ஒரு சந்தேகம் ? 
ஆனாலும் கூட்டணியில்லாமல் தேர்தலில் தனித்து போட்டியிட  திமுக  துணியாது என்பதும் தெளிவு. இதற்கான  வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக, கட்சியின் மாநில செயற்குழுவை, சென்னையில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி கூட்டி உள்ளது. இது அரசியலில் கொஞ்சம் கவனிப்பையும், லேசான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களின் கூட்டணிக்கான  முடிவை அண்மையில் அறிவித்து  தமிழக அரசியல் லகானை பிடிக்கத் தொடங்கியுள்ளன.இதனையடுத்து தற்போது திமுக வும் கூட்டணி பரிசீலனையில் தீவிரமாகி இருக்கிறது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை  எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை  அடைந்தாலும், `டெபாசிட்`  பெற்றதால், திமுக  தெம்பமாகவே  உள்ளது.  அதனால் கட்சியினர் அரசியல் வேலைகளை விரைவு படுத்தியுள்ளனர்.
ஆனால் ஆதரிப்பார் யாருமில்லை என்ற குரல் திமுக வில் ஒலிப்பதுதான் தற்போதைய யதார்த்தம். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பகிரங்கமாக மற்றக் கட்சிகளுக்கு  அழைப்பு விடுத்தும்,திமுக வேட்பாளருக்கு எந்தப்  பெரிய கட்சியும், ஏன் சிறிய கட்சிகளும் கூட  ஆதரவு அளிக்கவில்லை. அப்படியொரு அழைப்பு விடுக்கப்பட்டதை தமிழகக் கட்சிகள் கண்டு கொள்ளவே இல்லை.இது அப்போதே திமுகவிற்கு கலக்கத்தை உண்டாக்கியது.ஆனாலும் தேர்தல் பணியை உற்சாகமாக தொடங்கி,  டெபாசிட் வாங்கியது.

கடந்த 5 ஆண்டுகள்  ஆட்சியில் இருந்தும், இந்த 5 ஆண்டில் எதிர்க்கட்சியாகக் கூட அரசியல் பணியாற்ற முடியாமல்  முடங்கிப்போனது திமுக தலைமைக்கு பெரிய இக்கட்டான சூழலை உண்டாக்கியுள்ளது. அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைத்  தனியாகச்  சந்திக்க முடியாது என்பதை தலைமை நன்றாகவே  புரிந்துள்ளது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக விற்கு  'வாழ்வா சாவா போராட்டம்'தான்.

அதே நேரத்தில், தனது தலைமையில் வலுவான அணியை ஏற்படுத்துவதிலும் சிக்கல்கள் உள்ளன என்பதை  அறிவாலயம் அறிந்தே வைத்துள்ளது. தேமுதிக,பாமக, மதிமுக,தமாகா,காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்துதான், கூட்டணியை தேர்ந்தெடுத்தாக வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியும்  சேர முடியாது.  பாமக  தரப்பில் அக்கட்சியின் ஒரே எம்.பி.யான  அன்புமணியை முதல்வர் வேட்பாளர் என அறிவித்த சூட்டோடு டாக்டர் ராமதாஸ், அதிமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநர் மாளிகையில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அன்புமணியை முதல்வர் வேட்பாளர் என்பதை திமுகவால் சகிக்கவும் முடியாது, சம்மதிக்கும் முடியாது. மதிமுக பொதுச் செயலாளர்  வைகோவும், திமுகவுடன்  கூட்டணி இல்லை என வெளிப்படையாகவே  கூறிவிட்டார். அவரின் தலைமையில் தஞ்சை மற்றும் தேனி மாவட்டங்களில் இயற்கை வளம் மற்றும் விவசாயத்தைப்  பாதுகாக்க நடந்து வரும் தொடர் போராட்டங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதே போல  சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்தில், திமுக அதிமுக அல்லாத அணிக்கு அரசியல் முக்கியத்துவம் தரப்பட்டு அதற்காக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியையும் தமிழக சி.பி.எம். முன்னெடுத்துள்ளது. ராமதாசும் இதனை  வரவேற்றுள்ளார்.
எஞ்சியுள்ளது புதிய வரவான ஜி.கே.வாசனின் தமாகாவும், இளங்கோவனின்  காங்கிரசும்தான். இதில், தமாகாவின் நிலை இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவர்களில் ஒரு தரப்பினர் ஆளும் அதிமுகவுக்கும், இன்னொரு தரப்பினர் திமுக பக்கமும் கூட்டு  வைக்க  விரும்புகின்றனர். அதே நேரத்தில், விடுதலைச் சிறுத்தைகள்  போன்ற தலித் கட்சிகளோடும் `ஆக்டிவாக`   இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களோடு, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்து புதிய அணி அமைக்கும் முயற்சியிலும் ஜி.கே. வாசன் இறங்கியுள்ளார்.
எனவே தமாகாவும் திமுகவோடு  கூட்டணி அமைப்பது கனவே.  கடைசியாக பழைய நட்பான  காங்கிரஸ் மட்டும்தான்  உள்ளது. ஆனால் அதிலும் கூட, இரண்டு விதமான சிந்தனைகள் உள்ளன. தேசிய தலைமை, திமுகவை விரும்பாததால், கூட்டணி அமைவதில்  சிக்கல் சற்று தூக்கலாகவே உள்ளது.
இச்சூழ்நிலையில், திமுகவுக்கு  இருக்கும் ஒரே கூட்டணி வாய்ப்பு, விஜயகாந்தின் தேமுதிக  மட்டும்தான். எனவே அக்கட்சியை இழுப்பதன் மூலம், மற்ற கட்சிகளின் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என  திமுக திடமாக  நம்புகிறது.
இதன் முன்னோட்டமாகவே,  தமிழக சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி தேமுதிகவினர் நடப்புக் கூட்டத் தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுகவுடன் உண்டான கசப்பு தேமுதிகவுக்கு இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது.பாஜகவுடன் ஒட்டியும் ஒட்டாமலும்தான் இயங்கி வருகிறது. பாமகவுடன் கனவிலும் இனி தேமுதிக சேராது என்பதை நடந்த அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதே நேரத்தில் ஆளுங்கட்சி எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள, தேமுதிகவுடன்  சேரும்பட்சத்தில்,திமுக அணிக்கு மேலும் சில கட்சிகள் தானாகவே வந்து சேரும் என்றும் அறிவாலயம் அரசியல் கணக்குப் போட்டுள்ளது.
எனவே இது பற்றிய விவாதமே செயற்குழுவில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.அதிமுக அணிக்கு மாற்று அணி திமுக தலைமையில் அமைவதற்கான ஆருடங்கள் இந்தக் கூட்டத்தில் எப்படி கணிக்கப்படுகிறது  என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
2ஜி புயல் அவ்வளவு லேசில் விடுமா என்ன?

  - தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக