வியாழன், 19 பிப்ரவரி, 2015

47 ஆண்டுகளாக வெறுங்கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்ட மூதாட்டி

ஸ்ரீ வில்லிபுத்தூர், பிப். 19–> விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஊரணிபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 85). ஆண்டு தோறும் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் மகாசிவராத்திரி நாளன்று கொதிக்கும் நெய்யில் முத்தம்மாள் வெறுங்கையால் அப்பம் சுடுவார். இதனை முத்தம்மாள் 47 ஆண்டுகளாக செய்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டும் மகாசிவராத்திரி நாளில் கோவில் வளாகத்தில் கொதிக்கும் நெய்யில் வெறுங்கையால் அப்பம் சுட்டார். நள்ளிரவில் 12 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. வெறுங்கையில் அப்பம் சுடுவதைகாண அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். முத்தம்மாள் சுட்ட அப்பம் பத்ரகாளி அம்மனுக்கு படைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக