ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

Mauritius முன்னாள் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் கைது


போர்ட் லூயிஸ்,பிப்.07 (டி.என்.எஸ்) கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மொரிஷஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நவீன்சந்திர ராம்கூலமுக்குச் சொந்தமான கடற்கரை பங்களாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நடந்தது.இதுகுறித்து தவறான சாட்சியம் அளிக்க தொழிலதிபர் ஒருவரைத் தூண்டியதாக, தற்போது ராம்கூலம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எதற்காக பொய் சாட்சியம் அளிக்க ராம்கூலம் தூண்டினார் என்பது தெரியவரவில்லை.இது குறித்து தகவலறிந்த ராம்கூலமின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வெளியாகியுள்ளது chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக