ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

சமந்தா விரைவில் ஸ்விம்மிங் ஆடை விளம்பரத்திற்கு .....

ஸ்ருதிஹாசன், சமந்தா சரிக்குசரியாக போட்டியில் குதித்திருந்தாலும் அவர்களுக்கு வரும் பட வாய்ப்புகள் என்னவோ சமீபகாலமாக மந்தமாகி உள்ளது. தமிழில் ‘புலி'  படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் ஸ்ருதி. அதுபோல் சமந்தா விக்ரம் ஜோடியாக 'பத்து எண்ணறதுக்குள்ள' படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இதையடுத்து இருவரும் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். நகை கடை விளம்பரத்தில் ஸ்ருதி நடித்தால் செருப்பு கடை விளம்பரத்தில் சமந்தா நடிக்கிறார். விரைவில் உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடிக்க உள்ளார் சமந்தா.


ஏற்கனவே ஆணுறை விளம்பரத்தில் நடிக்க உள்ளதாக காஜல் அகர்வால் பற்றி பரபரப்பான தகவல் வெளியானது. இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘உள்ளாடை விளம்பரத்தில் நடித்தால் அதுவும் இதுபோல் நெருக்கடியை ஏற்படுத்துமா?' என்று தோழிகளிடம் சமந்தா தயக்கத்துடன் கேட்டார். ‘அதை பொருட்படுத்த வேண்டாம்' என தோழிகள் கூறியதாக தெரிகிறது. மேலும் உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம் தருவதாக கூறப்படுகிறதாம். வலிய வரும் பணத்தை ஏன் நழுவவிட வேண்டும் என்று சமந்தாவும் நடிக்க ஒப்புக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். - .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக