ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

Fire In Dubai Skyscraper துபாயின் 1105 அடி கட்டிடத்தில் பெரும் தீ ! உலகின் உயரமான கட்டிடங்களில் இதுவும் ....


துபாய்,பிப்.21 (டி.என்.எஸ்) துபாயில் 1105 அடி உயர அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் பதட்டம் அடைந்தனர்.துபாயின் மரினா நகரில் 79 மாடிகளை கொண்ட டார்ச் என்ற வானளாவிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான இந்த குடியிருப்பின் 50-வது மாடியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சில நொடிகளுக்குள் அதிகாலை 2 மணிக்கு தீ அலாரம் அடித்து பொதுமக்களை உஷார்படுத்தியது. உடனே குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர். மேலும் அப்பகுதியில் இருந்த சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்திறங்கிய தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  நம்ப சங்கர் படம் போல பெரிய பில்டப் பீலா அல்லாம் விட்டு கட்டுனாங்க !
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கட்டிடத்தின் இரண்டு பக்கமும் தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும், அப்போது அடித்த காற்று தீயை அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு இன்னும் வேகமாக பரவ செய்ததாகவும் தெரிவித்தனர். அப்போது 1105 அடி உயரம் உள்ள அந்த பிரமாண்ட கட்டிடத்திலிருந்து நெருப்பு மழை பொழிந்துள்ளது. 50-வது மாடியில் தொடங்கிய தீ 15 மாடிகளுக்கு பரவியது.

இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் மற்றும் தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக