திங்கள், 16 பிப்ரவரி, 2015

EVKS இளங்கோவன் : ஸ்ரீரங்கத்தில் திடீரென 50 ஆயிரம் வாக்காளர்கள் எப்படி முளைத்தார்கள் ?

ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவை வைத்துப் பார்க்கும் போது, காங்கிரஸ் கட்சி தேர்தலை புறக்கணித்ததே சரியான முடிவு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ஜனநாயகத்தின்படியோ, சட்டத்தின்படியோ உண்மையான தேர்தலாக இருக்காது என்கிற காரணத்தால் தான் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதிலிருந்து விலகியது. ஆனால் இன்றைக்கு வருகிற தேர்தல் வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தால் எங்கள் நிலை நியாயமானது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,20,962. தற்போது 2015 இல் மொத்த வாக்காளர்கள் 2,70,281. ஏறத்தாழ 50 ஆயிரம் வாக்காளர்கள் திடீரென்று முளைத்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி முளைத்தார்கள் என்பதை தேர்தல் ஆணையம்தான் விளக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் பயனில்லாத நிலையில் நீதிமன்றத்தை நாடிய பிறகு, போலி வாக்காளர்களை நீக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற ஆணையையும் தேர்தல் ஆணையம் மதித்து நிறைவேற்றவில்லை என்று இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக