திங்கள், 16 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ரங்கம் ட்ராபிக் ராமசாமி 1,167 வாக்குகள் ! அதிமுகவின் அடிமைகொழுந்து வளர்மதி 96,516 வாக்குகள்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி மொத்தம் 1,51,561 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் என்.ஆனந்த் 55,045 வாக்குகள் பெற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றார். பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம் 5015 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.அண்ணாதுரை 1552 வாக்குகளும் பெற்றனர். 'நோட்டா'வுக்கு மொத்தம் 1919 வாக்குகள் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி 1167 வாக்குகள் பெற்றுள்ளார்.
இரண்டாவது சுற்று முடிந்தவுடனேயே பெருவாரியான வாக்குகள் வித்தியாசம் காணப்பட்டதால், அதிமுக ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் பகிர்ந்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக, மார்க்சிஸ்ட் டெபாசிட் இழப்பு
இடைத்தேர்தலில் 5015 வாக்குகள் மட்டுமே கைப்பற்றிய பாஜக டெபாசிட் இழந்தது. இதேபோல், நான்காவது இடத்தைப் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் டெபாசிட் இழந்தது. திமுக தவிர போட்டியிட்ட அனைவருமே டெபாசிட் இழந்தனர்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக