ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

நான் பதில் சொல்லும் அளவுக்கு 'ப.சி.யும், கா.சி.'யும் ஒன்றும் பெரிய ஆட்கள் இல்லை: ஈவிகேஎஸ்

சென்னை: தான் பதில் அளிக்கும் அளவுக்கு ப. சிதம்பரமும் ,அவரது மகனும் பெரிய ஆட்கள் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சனிக்கிழமை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஆவணங்கள் மாயமாகியபோது அவர் உடனே பதவி விலக வேண்டும் என பாஜக தெரிவித்தது. தற்போது மத்திய அரசு ஆவணங்கள் திருடு போயுள்ளதால் முன்மாதிரியாக மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மோடி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.tamil.oneindia.com/ காங்கிரசில் சுவாரசியமாக பேசக்கூடிய ஒருவராவது இருக்கிறாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக