திங்கள், 23 பிப்ரவரி, 2015

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது


மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அரசுத் தலைமை வழக்குரைஞர் கையெழுத்திட்ட ஆவணத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு நஷீத் அதிபராக இருந்தபோது, மூத்த நீதிபதியைக் கைது செய்ய உத்தரவிட்டது தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளபோதிலும், அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவர் கைதாகும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பட்டது.
நீதிபதி அப்துல்லா முகமதைக் கைது செய்ய நஷீத் உத்தரவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, 2012 பிப்ரவரியில் நஷீத் பதவி விலகினார். 2013-இல் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியுற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக