திங்கள், 23 பிப்ரவரி, 2015

16 வயதினிலே ராஜ்கண்ணுவின் மகன் மிதுன்குமார் களத்தூர் கிராமத்தில் அறிமுகம்

சென்னை,பிப்.21 (டி.என்.எஸ்) பாராதிராஜா இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1977ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தை தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் மிதுன்குமார் 'களத்தூர் கிராமம்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.மிதுன், இயக்குனர் மகிழ்திருமேனியிடம், 'தடையற தாக்க' படத்தில் தாவிய இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் '16 வயதினிலே' படத்தின் டிஜிட்டல் பதிப்பின் இயக்குனராகவும் பணியாற்றினார். இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சரன்கே அத்வைதன் இயக்குகிறார். இவர் 'சின்னதாய்' புகழ் கணேஷ் ராஜியிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். ஜமீன் ஜாம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் ஆடுகளம் கிஷோர், ஏக்னா செட்டி, ரஜினி மகா தேவய்யா, தருண் சத்ரியா மற்றும் முன்னணி கன்னட நடிகர்கள் நடிக்கிறார்கள். தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
இரண்டாம் கட்ட பட பிடிப்பிடிப்பை விரைவில் நடத்தவுள்ளனர். ஏ.ஆர்.மூவி பாரடைஸ் சார்பில்  சீனு ராஜ் மற்றும் ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் சார்பில்  எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஆகியோர் இனைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள்   tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக