டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அடைந்துள்ள இமாலய வெற்றியை சர்வதேச ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன.
மத்தியில் ஆட்சி அமைத்த ஓராண்டுக்குள் பா.ஜ.க. சந்தித்துள்ள இந்த
தோல்வியையும், அக்கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி அடைந்துள்ள அபார வெற்றியையும்
நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ’சிறிய அரசியல் பூகம்பம்’ என வர்ணித்துள்ளது.
ஊழலுக்கு எதிரான சராசரி மனிதனால் பா.ஜ.க. சந்தித்துள்ள அதிர்ச்சி தோல்வி இது என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என்., ‘மேலே செல்லும் ஒரு பொருள் கீழே வந்தே தீர வேண்டும்’ என்ற இயற்பியல் தத்துவத்தை இந்த தேர்தல் முடிவு மீண்டும் நினைவூட்டுகிறது’ என கூறியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பா.ஜ.க. மோடியின் செல்வாக்கை மூலதனமாக வைத்து அடுத்தடுத்து நடைபெற்ற சில மாநில தேர்தல்களில் வெற்றி அடைந்தது. ஆனால், டெல்லி தேர்தல் பா.ஜ.க.வுக்கு கடுமையான போர்க்களமாக அமைந்து விட்டதாக பி.பி.சி. சுட்டிக் காட்டியுள்ளது. டெல்லி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு என தி டெலகிராப்-பும், மோடிக்கு கிடைத்த அடி என கார்டியன் தெரிவித்துள்ளது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக