செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

டெல்லியில் பாஜகவுக்கு கிடைத்திருப்பது மரண அடி ! நிச்சயம் நாடு முழுவதும் இந்த அடி தொடரும்! வீரமணி!


டெல்லி தேர்தல் முடிவு: மதவாத பிஜேபிக்கு மரண அடி: இது முடிவல்ல, ஒரு நல்ல தொடக்கம்: கி.வீரமணி டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கருத்து வருமாறு: மத்தியில் அமைந்த பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நடக்கும் பா.ஜ.க. ஆட்சியை கடந்த எட்டு மாதங்களுக்குமுன் வளர்ச்சி என்ற மயக்கப் பேச்சினாலும், காங்கிரஸ் ஆட்சியின்மீது ஏற்பட்ட கோபத்தாலும், பா.ஜ.க. மோடிக்குக் கிடைத்த வெற்றி என்பது நிலையானதா? அல்லது தற்காலிக வித்தைகளின் விளைவா? என்பதுபற்றி ஆராய்ந்து எடை போட்டுச் சொல்லும் மக்கள் -
வாக்காளர்கள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அளித்த சரியான தீர்ப்பு என்பதுதான் உண்மை! எனவே, உலகமே தலைநகர் டில்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவை எதிர்பார்த்திருந்த வேளையில், அதுவும் மோடி அய்ந்து முறை தேர்தல் பிரச்சாரத்தை செய்து பார்த்தும், அவரது நண்பர் அமித்ஷா வித்தைகளைக் காட்டியும் விடியற்காலை மூன்று மணி வரை விழித்து வேலை செய்தும், கிரண்பேடி என்ற மாற்றுக் கட்சி முன்னாள் அய்.பி.எஸ். பெண் அதிகாரிக்கு பா.ஜ.க.வில் ‘ஞானஸ்நானம்’ கொடுத்து, உடனேயே முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு செய்த நிலையிலும், எதுவும் டில்லியில் எடுபடவில்லை.

ஒற்றை இலக்கத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துவிட்டது என்பது - மக்களை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மதவெறிக் கும்பலின் மாய்மால - ‘வளர்ச்சி என்ற பிரச்சாரத்தினால்’ - ‘மயக்கப் பிஸ்கட்’ கொடுத்து - ஏமாற்றியதற்கான விலை தான் என்பதை சுவரெழுத்துப் போல் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது. இந்துத்துவா மதவெறிக்குக் கிடைத்த மரண அடியாகவே இந்தப் பா.ஜ.க. தோல்வி படலம். இது முடிவல்ல, ஒரு நல்ல தொடக்கமாகும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக