வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சாந்த சிகரம் தமன்னாவுக்கு வந்ததே கோபம் ....

சாந்தமானவர் எத்தனை டேக் சொன்னாலும் கோபப்படாமல் நடிப்பவர் என்று தமன்னாவுக்கு இன்டஸ்ரியில் நல்ல பேர் இருக்கிறது. ஒரு குரூப் படுத்திய பாடு அவரை கோபத்தில் கொப்பளிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. டோலிவுட் படமொன்றின் வெளிப்புற படப்பிடிப்பில் சமீபத்தில் பங்கேற்றார் தமன்னா. பாடல் காட்சியில் தற்போது பெண் மற்றும் ஆண் மாடல்கள் பயன்படுத்தப்படுகின்றனர். தமன்னா பங்கேற்ற பாடல் காட்சிக்காக மாடல்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அழகு தேவதைகளாக வந்திறங்கிய மாடல்களுடன் அவர்களது பாய்பிரண்ட்கள் ச¤லரும் வந்திருந்தனர். வெளிப்புற படப்பிடிப்பு என்றுகூட பார்க்காமல் அவர்கள் ஜோடி ஜோடியாக நின்றுகொண்டு சேட்டையில் ஈடுபட்டனர். இதை கண்டும் காணாமல் இருந்தார் தமன்னா.


ஆனால் ஜோடிகள் வரம்புமீற தொடங்கினர். இதையடுத்து கோபம் அடைந்த தமன்னா, ‘வெளிப்புற படப்பிடிப்புக்கு வந்து இதுபோல் அநாகரீகமாக நடந்துகொள்வது முறையல்ல. நீங்கள் ரொமான்ஸ் செய்வதென்றால் நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்Õ என்று சீறிப் பாய்ந்தார்' . இதில் அதிர்ச்சி அடைந்த மாடல் அழகிகள், ' தமன்னா தனது கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவரிடம் இதை சொல்லி வையுங்கள்Õ என்று இயக்குனரிடம் முறையிட்டனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. - .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக