வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்கள் அறிய தடை! மோடி அரசாங்கத்தின் சுயரூபம் அம்பலம் ,

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறைக்கு பிரதமர் அலுவலகம் தடை மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை பகிரங்கமாக வெளியிடும் நடைமுறைக்கு, பிரதமர் அலுவலகம் தடை விதித்துள்ளது. கடந்த 2010ஆம் அண்டில் இருந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள், அவர்களது குடும்பத்தினரின் தொழில் விவரங்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு வந்தன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய தலைமை தகவல் ஆணையரின் உத்தரவின்பேரில் இதுவெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் மத்தியிலிருந்து இந்த விவரங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பாஸ்வேர்டு இருந்தால்தான் இந்த விவரங்களை காண முடியும். பிரதமர் அலுவலகத்தின் இந்த முடிவுக்கு தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கே உள்ளது. ஆனால் இந்த பதவி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காலியாக இருக்கிறது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக