வியாழன், 12 பிப்ரவரி, 2015

ஆம் ஆத்மியை ஓஹோ என்று புகழும் கார்த்தி சிதம்பரம் அங்கு சேர்ந்து கொள்ளலாமே? இளங்கோவன்

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி ப. சிதம்பரம் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் அமோக வெற்றிக்குப் பிறகு கார்த்தி ப. சிதம்பரம் தனது டுவிட்டரில், “நமக்கு நம்பகமான தலைவர் தேவை மற்றும் பல படிப்பினைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இளங்கோவன், “காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகளில் கெஜ்ரிவாலைப் போன்ற ஒரு தலைவரை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக ஆம் ஆத்மி அனுமதித்தால் அக்கட்சியில் சேர்ந்து கொள்வதே நல்லது” என தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தன் ஆதரவாளர்களுடன் நடந்த சந்திப்பில் மோடியை புகழ்ந்து பேசிய விவகாரத்தில் கார்த்தி ப. சிதம்பரத்திற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் நினைவுகூரத்தக்கது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக