திங்கள், 23 பிப்ரவரி, 2015

தலிபான்களால் கடத்தப்பட்ட பாதிரியார் எட்டு மாதங்களுக்கு பின் விடுவிப்பு

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் திங்கள்கிழமை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்கானிஸ்தானிலிருந்து தம்மை விடுவிக்க நடவடிகை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். 8 மாதங்களுக்கு பின்னர் பிரேம்குமார் விடுவிக்கப்பட்டிருப்பதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரேம்குமார் விடுவிக்கப்பட்ட தகவலை அவரது தந்தை அந்தோணி சாமியிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். இதனை பிரேம்குமார் சகோதரர் ஜான்ஜோசப் செய்தியாளர்களிடம் கூறினார்.nakkheeran.in  மதமாற்ற பிரசாரம் செய்யாம இவிங்களால இருக்க முடியாது ? கண்டமேனிக்கு ஆளுங்களை போட்டு தள்ளாம அவிங்களாலையும் இருக்க முடியாது ? வேற வேலை இல்லையா  கல்வி பணிக்கு சென்றவர் பிரசங்கம் செய்தால்...பொறுத்துக்கொள்ள அப்கானிஸ்தான் என்ன இந்தியாவா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக