வியாழன், 26 பிப்ரவரி, 2015

டில்லியில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு:

டில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணத்தை குறைப்போம்' என, ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், மின் கட்டணத்தை, 50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்கு, 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, இந்த கட்டண குறைப்பு பொருந்தும். இந்த சலுகை, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும், மாதத்துக்கு, தலா, 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வினியோகிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக