முகூர்த்தநாள்’ என்று ஒரே நாளில் பல
திருமணங்களை வைத்து, லட்சக்கணக்கானவர்கள் ஓரே நாளில் ஒரே நேரத்தில்
கார்களில், பஸ்சில் இனனும் பொது இடங்களில் குவிந்து, குழப்பம் ஏற்படுத்தி;
வேலைகளுக்குப் போகிறவர்கள், உயிர்காக்க
அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறவர்கள் இப்படி அதிமுக்கியமாகப்
பயணக்கிறவர்களைச் சாலை மறியல் செய்வதுப்போல் தடுத்து,
துன்புறுத்துகிறார்கள்.
இதை ஒரே வரியில் சொல்வதென்றால்: யாரோ சிலர் தாலிக் கட்றதுக்கு நம்மத் தாலிய அறுக்குறாங்க.
ஊதாரித்தனமான இந்தத் திருமணத்தைத் தடை
செய்தாலே இந்தியாவின் பெரும் பிரச்சினையான; பட்டினிச் சாவு, பொருளாதர
நெருக்கடி, பெண்களுக்கான எதிரான வன்முறை, ஜாதி வெறி இப்படியான பல
பிரச்சினைகள் தீர்வுக்கு வந்து விடும்.
‘கல்யாணத்தை நடத்தி கடுப்பேத்துறாங்க மை மை லாட்’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக