சனி, 10 ஜனவரி, 2015

குஷ்பு உருத்திராட்சம் அணிவது சராயக்கட்சிக்கு அவமானமாம்? மனு தாக்கல்!

ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில், ருத்ராட்ச மாலையில் மாங்கல்யத்தை கோர்த்து கழுத்தில் போட்டிருந்த நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர்  வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார். திடீர் பிரபலம் பெறுவதற்கு இப்படி யார்மீதாவது பாய்ந்து பிராண்டுவது ஓல்ட் டெக்னிக் .யாரமீதும்பாய்ந்துபிராண்டினால் கிடைக்காத ஒரு பப்ளிசிட்டி  குஷ்புவை குறி வைத்து தாக்கினால் மட்டும் கிடைத்து விடுகிறது, அதாய்ன் சாராய  கேப்மாரி  கட்சிகாரங்க  எல்லாம்  அடிக்கடி குஷ்புவை  மட்டும் பிராண்டி பாக்குறாய்ங்க .

இந்த மனு மீது வரும் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நடுவர் சண்முகபவன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
அண்மையில் வாரமிருமுறை வரும் பத்திரிகையில் நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் மாங்கல்யத்தை கோர்த்து கழுத்தில் போட்டிருக்கும் படம் வெளிவந்திருந்தது. இது இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது.
எனவே, குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக