ராஜஸ்தானில் ராபர்ட் வதேராவுக்கான நில ஒதுக்கீடை ரத்து செய்து, அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2010 ஆம் ஆண்டு அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ்
ஆட்சி நடைபெற்றபோது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 374.44
ஹெக்டேர் நிலம் வாங்கினார்.அந்த நிலத்தை அவர்
அங்குள்ள பிகானிர் மாவட்டத்தில், தனது ‘ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி’
நிறுவனத்துக்காக வாங்கினார். ஆனால் இதில் மோசடி நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே
தகவல்கள் வெளியாகின.
அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, தற்போதைய முதல்வர் வசுந்தரா ராஜே
சிந்தியா, மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால்,
ராபர்ட் வதேரா நிலம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என
வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில், ராபர்ட்
வதேராவின் 18 நில ஒதுக்கீடுகள் தொடர்பாக கொலாவட் உட்கோட்ட நடுவர்
நீதிமன்றத்தில் உள்ளூர் தாசில்தாரால் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கொலாவட் உட்கோட்ட நடுவர் நீதிமன்றம், ராபர்ட் வதேரா மீது கொலாவட்
தாசில்தார் தாக்கல் செய்த 18 நில பேரங்கள் தொடர்பான புகார்கள் விசாரணைக்கு
எடுத்துக்கொண்டு உத்தரவிட்டுள்ளது.
அதில், ”கடந்த சில
வருடங்களாக தவறான விதத்தில் இந்த நிலங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது
தெரியவந்துள்ளது. மேலும், இந்த சொத்துக்கள் சட்டவிரோதமாக தனிநபர்களால்
கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், அந்த ஒதுக்கீடுகள் ரத்து
செய்யப்படுகின்றன” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக