புதன், 7 ஜனவரி, 2015

நித்தி ஆஸ்ரம சங்கீதாவின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது ! புதைக்கப்பட்ட உண்மை வெளிவரும் .....?

 திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்த அர்ச்சுனனின் மகள் சங்கீதா (வயது 24). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்த சங்கீதாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாகவும் நவலூர் குட்டப்பட்டில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சங்கீதாவின் பெற்றோர் பெங்களூர் விரைந்து சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் மகளின் உடலை பெற்று திருச்சிக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர். இந்த நிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் சங்கீதாவின் தாய் ஜான்சிராணி புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடம் பெங்களூரு என்பதால் அங்கு சென்று புகார் அளிக்க கூறினர். இதைதொடர்ந்து கர்நாடக மாநிலம் ராமநகர் டவுனில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கடந்த 3-ந் தேதி ஜான்சிராணி சென்றார்.  நித்தியின் பணம் போலீசையும்  வாங்கிவிடுமா என்பது போக போகத்தான் தெரியும் ?
அங்கு போலீஸ் சூப்பிரண்டு சந்திரகுப்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் நித்யானந்தா சாமியார் மடத்தில் தங்கியிருந்த தனது மகள் சங்கீதா டிசம்பர் மாதம் 28-ந் தேதி இறந்ததாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மறு பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலம் ராமநகர் பிடுவி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் நேற்று திருச்சி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்வது குறித்த தகவல் தெரிவித்தனர்.

அதன்பின் நவலூர் குட்டப்பட்டு சென்று சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தினர். நவலூர் குட்டப்பட்டுவில் சங்கீதா உடல் புதைக்கப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவரது உடல் மிகவும் அழுகி இருக்கும்.

இதனால் இன்று (புதன்கிழமை) அதிகாலை சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் மீண்டும் பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக மருத்துவ குழுவினர் இன்று காலை நவலூர் குட்டப்பட்டு செல்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சங்கீதா எப்படி இறந்தார்? என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக