புதன், 7 ஜனவரி, 2015

பவானி சிங் சறுக்கல்? ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு 2வது நாளாக இன்று விசாரணை : அரசு வக்கீல் திணறல்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கக்கோரி கர்நாடகா ஐகோர்ட்டில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான  விசாரணை இன்று 2வது நாளாக நடந்தது.அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்து குவிப்பு வழக்கு மீதான  மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று 2வது நாளாக கர்நாடகா ஐகோர்ட்டில் நடந்தது. நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தினார். அப்போது சொத்து குவிப்பு  வழக்கு சம்பந்தமாக கடந்த 1996ம் ஆண்டு சுப்பிரமணிசாமி தாக்கல்செய்த புகார் நகலை அரசு வக்கீல் பவானிசிங் தாக்கல் செய்தார்.ஜெயலலிதா தரப்பில் ஆஜரான  வக்கீல் குமார், ‘‘ ஜெயலலிதா உள்பட 4 பேரின் வருமான கணக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தவறாக மதிப்பீடு செய்துள்ளனர்.


அதுபோல் அவர்களது கட்டிட மதிப்புகளையும் அதிகப்படுத்தி காட்டி உள்ளனர். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவு  செய்ததாக கூறியுள்ளனர். ஆனால் அவ்வளவு பணம் செலவு செய்யப்படவில்லை. பெண் வீட்டில்தான் திருமண செலவு செய்தனர். இதில் ஜெயலலிதாவுக்கு தொடர்பு  இல்லை. அரசியல் ரீதியாக பழிவாங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்‘‘ என்றார். இதை கேட்ட நீதிபதி குமாரசாமி, ‘‘ அரசு வக்கீல் பவானிசிங்கிடம் மனுதாரரின் வாதம்  தொடர்பாக ஏதாவது கருத்து கூற விரும்புகிறீர்களா? என்றார். அதற்கு பவானி சிங் பதில் கூற முடியாமல் திணறினார்.இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு  மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக