வெள்ளி, 19 டிசம்பர், 2014

Pakistan 48 மணி நேரத்தி்ல் தீவிரவாதிகளுக்கு தூக்கு: ராணுவ தளபதி கோரிக்கை

புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள மூவாயிரம் தீவிரவாதிகளை 48 மணி நேரத்தில் தூக்கில் போட வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கு ராணுவ தளபதி ரஹீல்ஷரீப் கோரி்க்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் செயல்பட்டு வரும் ராணுவ பள்ளியில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 126க்கும்மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியாயினர் இச்சம்பவம் உலகையே உலுக்கி எடுத்தது. இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களின் பகுதியில் ராணுவம் எடுத்த நடவடிக்கைக்கு பழிக்கு பழியாக தான் இந்த நடவடிக்கை என கூறியுள்ளது. இதற்கு பதிலடியாக பிரதமர் நவாஸ்ஷெரிப் கூறுகையில் பாகிஸ்தானில் தற்காலி்கமாக நிறுத்தி வைக்கப் பட்ட தூக்குதண்டனை சட்டம் மீண்டும் நிறைவேற்றப்படும் என கூறினார்.
இருப்பினும் சில மணி நேரங்களிலேயே லஷ்கர் இதொய்பாவி்ன் கமாண்டர் ஜாகி உர் ரஹ்மான் லெக்வி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவி்த்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் பாகிஸ்தானி்ல் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பிரதமர் நவாஸ்ஷெரீ்ப் தூக்கில் போட வேண்டும் என டுவிட்டர் இணைய தளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக