புதன், 17 டிசம்பர், 2014

Pakistan 3 நாள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படும் நவாஸ் செரீப்! Was Pakistan school massacre in revenge for Malala's Nobel Prize?

Was Pakistan school massacre in revenge for Malala's Nobel Prize? Children forced to watch their teacher being burned alive as Taliban murder 132 children Gunmen in Peshawar entered school and started shooting at random One terrorist blew himself up in a classroom containing 60 children Teacher set on fire in front of pupils, with the children forced to watch Insurgents had ‘inside information’ before carrying out well-planned attack MailOnline heard harrowing eyewitness accounts of the massacre Taliban accepted responsibility for the attack, claiming it 'was just a trailer' Expert claims attack could be due to Malala Yousafzai winning Nobel prize David Cameron described yesterday's events as a 'dark day for humanity' Afghan Taliban criticised 'killing of innocent children' as against principles The massacre is the worst ever in the deeply troubled region Read more: http://www.dailymail.co.uk/news/article-2875729/Up-20-dead-500-children-teachers-taken-hostage-Taliban-gunmen-storm-military-run-school-Pakistan.html#ixzz3M7ZaK58n Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook
தலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கொடூரமான மிருகவெறி தாக்குதலை நடத்தி, 100க்கும் அதிகமான அப்பாவி குழந்தைகள் உள்பட பல பேரை கொன்று குவித்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் தேசிய துக்கத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார். பெஷாவரில் நிருபர்களிடம் பேசிய அவர், 'இந்த நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வரையில், தீவிரவாதத்துக்கு எதிரான போர் ஓயாது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்' என கூறினார். இந்த தாக்குதல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் மற்றும் உலகத் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.


பாகிஸ்தானின் இளம் மனித உரிமை ஆர்வலரும் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாய், இச்சம்பத்தில் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பாகிஸ்தானில் பெஷாவரையட்டியுள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக திகழ்கிறது. இங்குள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களும், பாகிஸ்தானின் போர் விமானங்களும் கடந்த 6 மாதங்களாக நடத்தி வருகிற வான்தாக்குதல்களில் தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு பழிக்கு பழிவாங்கும் விதத்தில்தான் தலீபான் தீவிரவாதிகள் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதல்களை நடத்தி, உலகையே நடுங்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   .maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக