வியாழன், 18 டிசம்பர், 2014

மீண்டும் வருகிறார் அபிராமி ! ஜோதிகாவுடன் சேர்ந்து How old are you? Remake!

வானவில்', ‘விருமாண்டி', ‘பட்ஜெட் பத்மநாபன்' உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் அபிராமி. ஹிட் படங்களில் நடித்தபோதும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இதையடுத்து தனது நீண்ட நாள் காதலன் ராகுல் பாவணனை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து விலகினார். அதேபோல் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவை மணந்துகொண்டு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹவ் ஓல்டு ஆர் யூ‘ தமிழ் ரீமேக் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார் ஜோதிகா. இதற்கான படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். இப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடிக்க ஹீரோயினை தேடினார் இயக்குனர். அபிராமியிடம் கேட்டபோது ஒப்புக்கொண்டார்.
இதுபற்றி அபிராமி கூறும்போது, ‘இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றை தேர்வு செய்து நடிக்க இயக்குனர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஹீரோயின் தோழியாக வரும் கதாபாத்திரம் படத்தில் நீண்ட நேரம் வருவதுடன் நடிப்புக்கும் நல்ல வாய்ப்பளிக்கும் கதாபாத்திரமாக இருந்தது. மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தை கனிகா செய்திருந்தார். அதுபிடிக்கவே ஒப்புக்கொண்டேன். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருவுடனும், ஜோதிகாவுடனும் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது‘ என்றார். - .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக