வியாழன், 18 டிசம்பர், 2014

மோடியை முந்திய சன்னி லியோன்! அதிகம் தேடப்பட்ட மனிதர்கள் பட்டியலில் ....

2014 ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளும், சம்பவங்களும் அலசி ஆராயப்பட்டு,   டாப் 10 பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஃபேஸ்புக், டிவிட்டர், ஆப்பிள் ஆகியவை 2014 ஆம் ஆண்டின் பட்டியலை வெளியிட்டன.
கூகுள் நிறுவனமும் தன்னுடைய யூடியூப் டாப் வீடியோக்களையும், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்களையும், சிறந்த ஆப்ஸ்களையும் வெளியிட்டது.
* சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வேயின் IRCTC முதல் இடம் பிடித்துள்ளது.
* மோட்டோ ஜி அதிகம் தேடப்பட்ட கேஜெட்டாக முதல் இடம் பிடித்துள்ளது.


* ஐபோன் 6 இரண்டாம் இடத்தையும், சாம்சங் எஸ் 5 மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

* நோக்கியா எக்ஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்எல் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் இடம் பிடித்துள்ளது.

* ஜியோமி இந்திய சந்தைகளில் கடைசியாக வந்தாலும் அதுவும் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.

* அதிகம் தேடப்பட்ட தேடல்களில் IRCTC முதல் இடத்திலும், பிளிப்கார்ட் இரண்டாம் இடத்திலும், ஸ்டேட் பேங்க் மூன்றாம் இடத்திலும் இடம் பிடித்துள்ளது.

* அதிகம் தேடப்பட்ட மனிதர்களில் சன்னி லியோன், பிரதமர் நரேந்திர மோடி, சல்மான் கான், காத்ரினா கைப், தீபிகா படுகோனே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக