வியாழன், 18 டிசம்பர், 2014

ஏழு வயது மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்! உத்தரபிரதேசத்தில் கல்வியின் லட்சணம்?


உத்தரப் பிரதேச மாநிலம் பெரேலியில் ஏழு வயது மாணவனை ஆசிரியர் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது.
உத்தரப் பிரேதச மாநிலம் பெரேலியில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் அராஜ் என்ற மாணவனை ஒழுங்காக வீட்டுப் பாடங்கள் செய்யவில்லை என்றும் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்றும் வகுப்பாசிரியர் அந்த மாணவனை அடித்துள்ளார்.
மாணவனின் மூக்கு வழியே ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. இதையடுத்து அவனை பள்ளி ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவனது பெற்றோருக்கு போன் செய்த அவர்கள் அவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு பெற்றோர் சென்று பார்த்தபோது, அராஜ் சுயநினைவின்றி இருந்துள்ளான். சிறிது நேரத்தில் அவன் இறந்துவிட்டான். மாணவனுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அதில் தலையில் படுகாயமடைந்ததால் மரணம் நிகழ்ந்ததாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோரின் புகாரை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக