வியாழன், 18 டிசம்பர், 2014

ஆபாச படங்கள் பார்த்து காமத்தால் வேலூர் மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொன்றேன்!


வேலூர்,டிச.17 (டி.என்.எஸ்) பள்ளி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 10ம் வகுப்பு மாணவன், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஆபாச படங்கள் பார்த்து காம உணர்ச்சிக்கு அடிமையாகி, மாணவியை கொலை செய்தேன், என்று தெரிவித்துள்ளார்.கொலை தொடர்பாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த மாணவன், தனது வீட்டில் லேப்-டாப் இருந்ததாகவும், அதில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளான். மேலும், இரவு நேரங்களில் அடிக்கடி ஆபாச படங்களை பார்த்ததால் அவனது கவனம் முழுக்க செக்ஸ் உணர்ச்சிகளுக்கு மாறியது.இதனையடுத்து தன்னுடன் பள்ளிக்கு வரும் மாணவி மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவியை அடைய திட்டமிட்டுள்ளான். கடைசியில் மாணவியை உருக்குலைத்து கொலை செய்யும் அளவுக்கு மாறிவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான். tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக